கால்கள் மரத்துப் போக என்ன காரணம்?

published 1 year ago

கால்கள் மரத்துப் போக என்ன காரணம்?

உணவு வேளையில் அனைவரும் கடைப்பிடிக்கும் பழக்கம் தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் தசைகளின்  இயக்கம்  நன்கு இருக்கும் .

தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்திருக்கும் போது கால்கள் மரத்துப் போக என்ன காரணம். இதற்கு என்ன தீர்வு?

பொதுவாகவே நாம் சம்மணமிட்டு தரையில் உட்காரும் போது கால் பாதங்கள் மரத்துப்போக வாய்ப்பு உண்டு. 

இதை 'ஸ்லீப்பிங் ஃபுட் சிண்ட்ரோம்' (Sleeping Foot Syndrome) என்று சொல்வோம். 

பெரோனியல் நரம்பின்மீது இடுப்பிலுள்ள எலும்பு ஒன்று அழுத்தம் கொடுப்பதால் பாத நரம்புகளுக்கான சிக்கல் சரியாகப் போவதில் தடை  ஏற்படலாம். அதன் விளைவாக மரத்துப்போன உணர்வு வரும்.

ஒருவேளை இந்தப்  பிரச்சனை சம்மணமிட்டு உட்காராத நிலையிலேயே வந்தால் தான் இது குறித்துப் பயப்பட வேண்டும். 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless Legs Syndrome) என்ற பாதிப்பு  கணுக்கால் தசைகளில் சிலருக்கு வரலாம். இந்தப் பிரச்சனையில் கணுக்கால் தசைகளில் வலி இருக்கும். 

அந்தப் பிரச்சனை இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாடோ, வைட்டமின் பி 12 குறைபாடோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும். 

குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான சப்ளிமென்ட்டுகள் கொடுத்தாலே சரியாகிவிடும்.

மற்றபடி மரத்துப்போதல் பிரச்சனை குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி  கால்களை அசைத்தாலே இதைத் தவிர்க்கலாம்

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe