இந்த சுதந்திர தினத்திற்குத் தேசியக்கொடி மக்களே.! உங்கள் வீடு தேடி வர வேண்டுமா?

published 1 year ago

இந்த சுதந்திர தினத்திற்குத் தேசியக்கொடி மக்களே.! உங்கள் வீடு தேடி வர வேண்டுமா?

நாட்டு மக்கள் அனைவரும் தேச பக்தியோடு இருக்கவேண்டும். மக்கள் தங்கள் நாட்டின் மீது அதிக அன்பு காட்டுவதற்காகவும் தேச பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும்  சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் மக்கள் தங்கள் இல்லங்களில் தேசிய கோடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன்படி கடந்த ஆண்டு  23 கோடி குடும்பங்கள் தங்கள் இல்லங்களில் தேடிய கோடியை ஏற்றி தேச பக்தியை வெளிப்படுத்தினர். மக்கள் தங்கள் இல்லங்களில் தேசிய கோடியை ஏற்றுவதன் மூலம் மக்கள் தங்கள் ஆர்வத்தையும் தேச பக்தியையும் வெளிப்படுத்தினர். 

இதனிடையே இந்த ஆண்டும் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடியேற்றி மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்டு 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இல்லங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் தேசிய கோடியை விற்பனை செய்வது உறுதியாகியுள்ளது.  தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று கொடியை வாங்கிக் கொள்ளலாம். இ போஸ்ட் ஆபீஸ் வசதி மூலமாகவும் தேசியக்கொடி வாங்கிக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

தேசியக்கொடி உங்கள் வீடு தேடி வர வேண்டும் என்று நினைத்தால் உடனே அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe