கோவையில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. மிஸ் பன்னிடாதீங்க

published 1 year ago

கோவையில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. மிஸ் பன்னிடாதீங்க

கோவை: கோவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாபெரும் தனியார்த் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மேட்டுப்பாளையம் சாலை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். 

இதற்காகத் தொழிலாளர் துறை அமைச்சர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டத்திற்கு அளித்துள்ளார். முகாமில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமில் கலந்து கொள்ள தற்பொழுது வரை 257 நிறுவனங்கள் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.   

வேலைவாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கும் இளைஞர்கள் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் இந்த முகாமில் குறைந்தபட்ச மாத சம்பளம் 10 ஆயிரத்திற்கும் கீழ் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோல் முகாம் நடைபெறும் நாட்களில் உணவு குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியின் சார்பிலும் வேலைவாய்ப்பிற்கு வரும் இளைஞர்களுக்கு வழி காட்டுவதற்கு உதவியாளர்கள் உள்ளனர். 

இன்ஜினியரிங், ஹெல்த் கேர், உட்பட அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிறுவனங்கள் வருகை புரிவர், பெரும்பாலும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe