கோவைக்கு வருகிறார் ஜனாதிபதி விருது பெற்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி

published 1 year ago

கோவைக்கு வருகிறார் ஜனாதிபதி விருது பெற்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி

கோவை: தமிழகம் முழுக்க 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

சென்னை மதுரை கோவை திருச்சி திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி ஐ.பி.எஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவரை மேற்குமண்டல ஐ.ஜி-யாக நியமித்துள்ளது தமிழக அரசு. ஏற்கனவே இந்த பதவியை சுதாகர் நிர்வகித்து வந்தார். தற்போது சுதாகர் சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் ஐ.பி.எஸ்-ன் பதவிக்கு சரவணா சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளளார்.

இதில் பவானீஸ்வரி சிறந்த சேவைக்காக கடந்த 2017ம் ஆண்டில் ஜனாதிபதி பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe