கோவையில் வீடு தேடிச் சென்று மரக்கன்றுகள் வழங்குகிய ஊராட்சி நிர்வாகம்..!

published 1 year ago

கோவையில் வீடு தேடிச் சென்று மரக்கன்றுகள் வழங்குகிய ஊராட்சி நிர்வாகம்..!

கோவை : கிணத்துக்கடவு, கோதவாடியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு தோறும் இலவச மரக்கன்று வழங்க ஊராட்சி  முடிவு செய்துள்ளது.கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் இலவச மரக்கன்று வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மரக்கன்று வழங்கச் சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர்களில், மண்ணுடன் தேங்காய் மஞ்சியைக் கலந்து, அதில் விதை போட்டு வைக்கும் பணி நடக்கிறது. இதில், முதற்கட்டமாக, ஆயிரம் மரக்கன்று வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.இதில், புங்கன், வேம்பு, கொண்டை, முருங்கை, பப்பாளி என பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.ஊராட்சி தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:கோதவாடியில் உள்ள குளத்தின் அருகிலும், ரோட்டின் இரு பக்கத்திலும், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, வீடு தோறும் மரக்கன்று வழங்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.இதனால், வரும் காலங்களில் குளம் மற்றும் ரோட்டோர பகுதிகளில் செழிப்பாகக் காட்சியளிக்கும். வீடுகளில் மரம் வளர்ப்பதால் ஊர் செழிப்படையும் என கூறினார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe