கோவை மக்களே டிராபிக்-ல தவிக்கிறீங்களா? இனி ரசிக்க இருக்கு 'நறுக்' ஓவியங்கள் | Photo Story

published 1 year ago

கோவை மக்களே டிராபிக்-ல தவிக்கிறீங்களா? இனி ரசிக்க இருக்கு 'நறுக்' ஓவியங்கள் | Photo Story

கோவை:  நம்ம கோயம்புத்தூர் ட்ராஃபிக்-ல சிக்கி நின்னு 'போர்' அடிக்குதுனு மொபைல் போனை எடுத்து பார்த்துட்டு, சிக்னல் போட்டதும் மொபைலை பதட்டமாக உள்ளே வைப்பவரா நீங்க.?

சிக்னலில் நின்னு 'போர்' அடிச்சு நீங்க சிரமப்படக் கூடாதென்று தான் நீங்க வேடிக்கை பார்க்கவும், ட்ராஃபிக்-ல வண்டி ஓட்டுற டென்சனை குறைக்கவும், போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்கவும் கோவை மாநகராட்சி இந்த முடிவை எடுத்துருக்கு.

இம்முயற்சியின் மூலம் முதற்கட்டமாக கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் தாங்கு தூண்களில் தமிழ் மற்றும் இந்தியப் பண்பாட்டைக் குறிக்கும் விதமான ஓவியங்களும், கோவை மற்றும் கோவையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களின் அழகைக் காட்டும் விதமான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

அது மட்டும் இல்லாமல் மக்களின் சமூக பொறுப்புணர்வை நினைவுபடுத்தும் விதத்திலும் சில படங்கள் வரையப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம், மரம் வெட்டுதலால் ஏற்படும் பாதிப்பு, கோவைக்கு அருகிலுள்ள தெப்பக்காடு யானைகள் முகாம், மணிக்கூண்டு, கோவை ரயில் நிலையம், பழமையான ஊட்டி மலை ரயில் எஞ்சின், ஜல்லிக்கட்டு, ஆகிய ஓவியங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன.

26வது கனெக்ஷன் விளையாட்டு.. உங்களால் விடை கண்டுபிடிக்க முடிகிறதா? விடை அடுத்தடுத்த செய்திகளுக்குள் பதிவிடப்படும்..

 

 

இதற்கு முன்பாக திருச்சி சாலை மேம்பாலத் தூண்களில் தேசத் தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டன. அதற்கு அடுத்த கட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் மேம்பாலத் தூண்களில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமான படங்கள் வரையப்பட்டன. தொடர்ந்து மேலும் பல ஓவியங்களும் தற்போது வரையப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள பல பகுதிகளில் அரசு கட்டிட சுவர்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களில் போஸ்டர் ஒட்டும் அவலம் தொடர்ந்து வருவது நாம் அறிந்ததே. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கோவை மாநகராட்சி நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டும் போஸ்டர் ஒட்டப்படுவது குறையவில்லை.

இதனை தடுத்து நிறுத்தும் விதமாகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாக இருந்தாலும், நம்ம மக்கள் கண் குளிர ஓவியங்களைப் பார்த்து ரசிக்கனும் என்பதற்காகவே வரைஞ்சு வெச்சிருக்காங்கன்னு நெனச்சு, இந்த ஓவியங்களை ரசிக்கிறதுல தப்பே இல்லைங்க...

கோவை மக்களே.. நம்ம ஊர் செய்திகளை அறிந்துகொள்ளவும், கனெக்ஷன் விளையாட்டுகளை விளையாடவும் நமது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம்.. குழுவில் இணைய லிங்க்-ஐ சொடுக்கவும்.. https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe