"நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு"- காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு போஸ்டர்

published 1 year ago

"நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு"- காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு போஸ்டர்

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி,  மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்து வைத்தது. இதனை தொடர்ந்து நேற்று ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு சென்றார்.

இதனை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் கோவை மாநகரில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைபடத்தில் இடம்பெற்றுள்ள பிரபல வசனமான " நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் தெற்கு வட்டாட்சியர் அலுவலம் அருகிலும், உக்கடம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe