திருப்பூரில் குழந்தை திருமணம் விழிப்புணர்வு கூட்டம்

published 1 year ago

திருப்பூரில் குழந்தை திருமணம் விழிப்புணர்வு கூட்டம்

திருப்பூர் : வளர்ந்து வரும் காலகட்டங்களில் பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது குழந்தை திருமணம்.

இது தொடர்பாகத்  திருப்பூர் கலெக்டர் அரங்கில் பெண் பிள்ளை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இது குறித்து அவர் பேசுகையில், சட்டப்படி, ஆண்களின் திருமண வயது 21 பெண்களின் திருமண வயது 18 ஆகும்.  சிறு வயதில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆணோ அல்லது பெண்ணோ அத்திருமணத்தை ரத்து செய்யலாம் அல்லது செல்லாது என்றும் கூறலாம்.

அதுபோல குழந்தை திருமணம் செய்தால், சட்ட ரீதியான தண்டனைகளான இரண்டு ஆண்டு சிறை; ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிந்தால் தயக்கமின்றி புகார் அளிக்கவேண்டும்' என, மாவட்ட சமூக நல அலுவலர் கூறினார்.

சிறு வயதில் திருமணமாகும் பெண்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். உரிய காலத்திற்கு முன்பே ஏற்படும் உடலுறவு, குழந்தைப் பேறு (எச்.ஐ.வி மற்றும் கர்ப்பப்பை புண் உட்பட) ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

சமுதாயத்தில் உரிய அந்தஸ்து, அதிகாரம், அறிவு முதிர்ச்சி போன்றன இல்லாமல் சிறு வயதிலேயே திருமண பந்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும், வீட்டில் வன்முறைக்கு உள்ளாகின்றனர். மேலும் பாலியல் துன்புறுத்தலாலும், சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்டும் வருந்துகின்றனர்.

சிறு வயது திருமணத்தால் சிறுமியர்களுக்கு கல்வியும் பொருத்தமான வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தொடர்ந்து வறுமையிலேயே வாட வேண்டிய சூழல் உருவாகிறது. குழந்தை திருமணம் தொடர்ந்த, மாறாத, பாலினச் சமமின்மையையும், கூடவே நோய் மற்றும் வறுமையினையும் தருகிறது.

சிறு வயதிலேயே முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தினால், தாயும் சேயும் மகப்பேறின் போது இறக்கும் சதவிகிதம் மிக அதிகமாகவே உள்ளது.

குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் 181 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., மாவட்ட நீதிபதி, கலெக்டர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரிடம் சென்று புகார் செய்யலாம்.

புகார் செய்பவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியே வராது. காவல்துறையினர் சாட்சி சொல்ல அழைக்கமாட்டார்கள்.எனவே குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிக்க யாரும் பயப்பட வேண்டாம்.

ஒரு குழந்தை ஆரோக்கியமானதாக வளர்ப்பது பெற்றோரின் கையில் உள்ளது. குழந்தைகளின் மனநிலையை அறிய அவர்களுடன் மனம் விட்டுப் பேசினால் போதுமானது.

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் பெண்ணின் நிலை குறித்து டாக்டர் ரமணி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி ஆகியோர் உரையாற்றினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe