பொள்ளாச்சியில் மாபெரும் கல்விக்கடன் மேலா..!

published 1 year ago

பொள்ளாச்சியில் மாபெரும் கல்விக்கடன் மேலா..!

கோவை : தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் கருதி  உயர்கல்வி பயில உதவும் வகையில் கல்விக் கடன் மேலாவை வரும் புதன்கிழமை அன்று (ஆகஸ்ட் 16) பொள்ளாச்சியில் நடத்த உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின்  ஒரு பகுதியாக நடத்தப்படும் மேலாவில்,பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட  மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமே இந்த கல்விக்கடன் மேலாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது எனப் பொள்ளாச்சி எம்பி கே.சண்முகசுந்தரம் தலைமையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. சண்முகசுந்தரம் கூறுகையில், "பொள்ளாச்சி- உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள  டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கல்விக்கடன் மேலா நடைபெற உள்ளது. இந்த கல்விக்கடன் மேலாவில் மாணவர்கள் பதிவு செய்ய மாணவர்களுக்கான அரசு இணையதளமான வித்யா லட்சுமி இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய  பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.இந்த கல்விக்கடன்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பதிவு செய்ய உதவும் வகையில் ஒரு பிரத்தியேக மேசை அமைக்கப்பட்டிருக்கும்.

பல்வேறு வங்கிகளின் 40 ஸ்டால்கள் இடம்பெறும் கல்விக் கடன் மேலாவில் சுமார் 4,000 மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். பட்டதாரி சான்றிதழ்கள் " இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe