கோவையில் விளையாட்டு போட்டியில் கலக்கிய மாற்றுத்திறனாளிகள்!

published 1 year ago

கோவையில் விளையாட்டு போட்டியில் கலக்கிய மாற்றுத்திறனாளிகள்!

கோவை :  கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் மிகவும் உற்சாகம் கலந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  விளையாட்டு போட்டியில் நாங்களும் சாதிப்போம் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியோடும் விளையாடினர்.

நாங்கள் மாற்றுதிறனாளிகள் அல்ல எங்கள் திறங்களை மாற்றி அமைத்து சாதனை புரியுவோம் என்ற உச்சாகத்துடன் விளையாட ஆரம்பித்தனர்.

சுதந்திர தின விழாவானது இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுடன் கொண்டாப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில்  மிகவும் சிறப்பான முறையில் கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் பல்வேறு பிரிவுகள் பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் கோளாகலமாக நடைபெற்றது.

இந்த அடிப்படையில் செவித்திறன் குறைபாடு, கண் பார்வையற்றோர், வாய் பேச இயலாதோர், மற்றும் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோர் என பல்வேறு பிரிவினர்களுக்கு தனித் தனியாக போட்டி நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப் படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe