பவர் கட் ஆச்சுன்னா அவ்ளோ தாங்க..! கோவையில் அந்த காலத்து தியேட்டர் ஆபரேட்டரின் அனுபவங்கள்..!

published 1 year ago

பவர் கட் ஆச்சுன்னா அவ்ளோ தாங்க..! கோவையில் அந்த காலத்து தியேட்டர் ஆபரேட்டரின் அனுபவங்கள்..!

கோவை :  சினிமா என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் தியேட்டர் சென்று படம் பார்ப்பது என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். நாம் ஜாலியா படம் பார்க்க தியேட்டர் ஆபரேட்டரின் பங்கு முக்கியமானது. திரையரங்கம் தொடங்கிய காலகட்டங்களில் தியேட்டர் ஆபரேட்டர்களுக்கு என்று தனி மாரியாதை இருக்கும்.  அப்படிப்பட்ட ஒரு தியேட்டர் ஆபரேட்டரின் அனுபவங்களை விரிவாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

80 காலகட்டங்களில் தியேட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தவர் கோவையுள்ள சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் ஆபரேட்டர் அனுபவங்களை அனுபவித்து கூறுகிறார்.

கோவையில் கோனியம்மன் கோவிலுக்கு அருகே கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த ராயல் தியேட்டரில் தான் இவர் தியேட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றினார். அன்றைய  காலகட்டம் மிகவும் வசதிகள் குறைவு. படம் ஜாலியா போகும் போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் வழக்கம் நமக்கு நினைவிருக்கலாம்.

அப்போது எல்லோரும்  என்னதான் படம் ஓட்டுறாங்க ஒன்னும் சரி இல்லனு கத்துவது வழக்கம். அதுமட்டும் இல்லாமல்  "தியேட்டர் ஆபரேட்டர் சரி இல்லப்பா" என்ற குரல்களும் படத்த போடு என்று தியேட்டர் ஆப்பரேட்டர்களை வசைபாடும் மனிதர்களையும் நாம் பார்த்திருப்போம், இல்லை நாமும் ஒருவராய் இருந்துருப்போம்.

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டில் இவர் பணிபுரிந்து வந்த ராயல் தியேட்டர்மூடப்பட்டது. அந்த தியேட்டர் தற்போது வாகனம் நிறுத்தும் இடமாக செயல்பட்டு வருகிறது.தியேட்டர் விட்டு செல்ல மனம் இல்லாத இந்த தியேட்டர் ஆப்பரேட்டர் ராஜேந்திரன் தற்போது வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பணி புரியும் போது உள்ள கஷ்டம் அனுபவமாக மாறும் போது நமக்கு இஷ்டம் ஆன ஒன்றாக மாறிவிடும். இப்படி தியேட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்த காலத்தில் ராஜேந்திரன் சேர்த்து வைத்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"கோவை மாவட்டத்தில் உள்ள சோமனூர் தான் எனதுசொந்த ஊர். நான் ராயல் தியேட்டருக்கு கடந்த 1984ம் ஆண்டு தியேட்டர் ஆபரேட்டராக பணிக்கு சேர்ந்தேன். அப்போது "என் தமிழ் என் மக்கள்" என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஆப்ரேட்டர்களுக்கு என்று தனி மரியாதை உண்டு. இப்போதெல்லாம் அப்படி இல்லை.

ராஜேந்திரன் கூறியதாவது:

படம் ரிலீஸ் ஆகும் நாளில் 10 மணிக்கு படத்தின் ரீல் பெட்டி வந்துவிடும். அதனை எடுத்து படத்தை ஓட்டுவதற்கு தயாரி செய்துவிடுவோம். அப்போதெல்லாம் திரையரங்கில் நல்ல ஆரவாரம் இருக்கும். அடிக்கடி மின்வெட்டு ஏற்படும்.

அப்போது வாய்க்கு வந்தபடி எல்லாம் ரசிகர்கள் திட்டுவார்கள்.  நான் எதுவும் பேச முடியாது. அந்த வார்த்தைகளை எல்லாம் பொது இடத்தில் சொல்லக்கூட முடியாது. இப்போது நினைத்து பார்த்தால் சிரிக்க தான் தோன்றுகிறது.

திரையரங்கு டிஜிட்டல்மயமான போது மின்வெட்டு ஏற்படும் நேரத்தில் சத்தம் மட்டும் வராது. அப்போதும் திட்டு வாங்கித்தான் ஆக வேண்டும். எம்.ஜி.ஆர் ரசிகன் நான். அவரது படத்தை ஓட்ட வேண்டும் என்றே நான் இந்த தொழிலை பழகினேன். அவரது புதிய படங்களை ஓட்ட முடியவில்லை. ஆனால் பழைய படங்களை ஓட்டியிருக்கிறேன்.

 

தியேட்டராக இருந்த ராயல் திரையரங்கம் தற்போது மூடப்பட்டு வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. நான் இப்போது இங்கு வாகனங்களை பாதுகாக்கும் பணியில் இருக்கிறேன்.  நான் ஆபரேட்டராக பணிபுரிந்து இந்த தியேட்டர் மூடப்பட்டிருப்பதை பார்க்கும் போது வருத்தம் அளிப்பது மட்டும் அல்லாமல் கடந்த நினைவுகளை சுமந்து கொண்டு சுகமாக இதே இடத்தில் பயணிக்கிறேன் என்று வருத்தத்துடன் கூறினார்.

என்னதான் அதே இடத்தில் வேலை என்றாலும் கடந்த என் தியேட்டர் ஆபரேட்டர் நினைவுகள் என்றும் நினைவில் வந்து போகும் என்றும் ராஜேந்திரன் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe