ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து நகைகளை சுருட்டிய கும்பல்.. ஸ்கெட்ச் போட்ட கோவை போலீஸ்..!

published 1 year ago

ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து நகைகளை சுருட்டிய கும்பல்.. ஸ்கெட்ச் போட்ட கோவை போலீஸ்..!

கோவை,: திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் (47). இவரிடம் இருந்து 500 கிராம் (62.5 பவுன்) தங்க நகைகளைக் கோவை விமான நிலையத்தில் காவல்துறை வேடம் அணிந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அபகரித்துச் சென்றதாக அப்துல் ரசாக் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று அந்த மர்ம கும்பல் காவல்துறையிடம் பிடிப்பட்டது.

பின்னர் இது குறித்து மாநகர உதவி கமிஷனர் பார்த்திபன் கூறியதாவது: சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த ஒரு பயணியிடம் இருந்து தங்க நகைகளை வாங்கி வேறு ஒருவரிடம் தருவதற்காக அப்துல் கடந்த 4ம் தேதி கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குச் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணியிடம் இருந்து மொத்தம் 500 கிராம் தங்க நகைகளை வாங்கியுள்ளார். இரவு 8.15 மணியளவில் ஏர்போர்ட் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றபோது, காக்கி சீருடை அணிந்திருந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவரை வழிமறித்து, தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

ஈரோடு பவானி அருகே அப்துல் ரசாக் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை பறித்துவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து அப்துல் ரசாக் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம கும்பலைத் தேடி வந்தோம். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம். அதில் மொத்தம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முன்கூட்டியே கோவை விமானம் நிலையம் அருகே அறை எடுத்துத் தங்கியுள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த மர்ம கும்பல் இன்று பிடிப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டை சேர்ந்த உடம் பிறந்த சகோதரர்களான மகேந்திரன், குருதேவன் மற்றும் திருமூர்த்தி என்பதும், இதற்கு உதவியாக இருந்தது இவர்களின் உறவினர் மகேஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இந்த கொள்ளை சம்பவத்தைக் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். மேலும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விமான நிலைய சுங்க அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe