தமிழ் புத்தாண்டு : கோவையில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்..!

published 2 years ago

தமிழ் புத்தாண்டு : கோவையில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்..!

கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தமிழ் புத்தாண்டு திருநாளான சித்திரை ஒன்றாம் தேதியான இன்று மக்கள் அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். தொடர்ந்து மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து இறைவனை வழிபடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கோவை காட்டூர் பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்திரை முதல் நாள் என்பதால் அனைவரும் கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe