ஓணம் பண்டிகையை முன்னிட்டு மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பு

published 1 year ago

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பு

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை வருகிற 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சேலம் கோட்ட ரயில்வே சார்பால ஓணம் பண்டியை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


ஓணம் பண்டிகையை ஒட்டி வருகிற 26ந் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து மங்களூர் சென்ட்ரல் வரை சிறப்பு ரயில் ரயில் (எண்.06049) இயக்கப்பட உள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படும் இந்த ரயில் 26ந் தேதி மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூர் சென்று சேர்கிறது.

இதேபோல் இந்த மீண்டும் 2ந் தேதி மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூர் சென்று சேர்கிறது.

இதேபோல் மங்களூர் சென்ட்ரலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 27ம் தேதி இரவு 11 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம்  3.15 மணிக்கு தாம்பரம் சென்று சேர்கிறது. இதேபோல் இந்த ரயில் 3ந் தேதி வரை இரவு 11 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

இந்த ரயில் சென்னை எக்மோர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பாலக்காடு, சொர்ணூர், குட்டிபுரம், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி கண்ணூர், பயணுர், கண்ணங்காடு, காசர்கோடு சென்றடைந்து மங்களூரை அடைகிறது.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe