IPC, CrPC, எவிடன்ஸ் சட்டம் மாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

published 1 year ago

IPC, CrPC, எவிடன்ஸ் சட்டம் மாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

கோவை : IPC, IrPC, மற்றும் எவிடன்ஸ் சட்டத்தை மாற்றம் செய்து குற்றவியல் சட்டத்தைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர்கள், மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு  குற்றவியல் சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது, எனவும் இச்சட்டத்தை ஏற்க மாட்டோம் எனவும் வடமாநில சட்டங்களைத் திரும்பப் பெறு எனவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவரும் இந்த திருத்தச் சட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இந்த IPC, IrPC மற்றும் எவிடன்ஸ் சட்டங்கள் என்பது 100 குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் அடிப்படை தத்துவம் எனக் கூறிய அவர்கள் இவைகள் எல்லாம் ஆதாரமாக இருக்கின்ற சட்டங்கள் எனவும், இந்த உரிமைகள் பறிக்கப்படும் போது, குற்றவாளி தான், நான் நிரபராதி என்று நிரூபிக்கின்ற கடமை அவர் மீது தள்ளப்படும் எனத் தெரிவித்தனர். 

இது வரை குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி எனக் கையாளும் முறை அப்படியே தலைகீழாக மாற்றப்படுவதாகவும் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe