நம்ம ப்ரோசோன் மாலில் ரங்கோலி போட்டி நடக்குது..! கலந்துக்கிட்டா எக்கச்சக்கமா பரிசுகள்..!

published 1 year ago

நம்ம ப்ரோசோன் மாலில் ரங்கோலி போட்டி நடக்குது..! கலந்துக்கிட்டா எக்கச்சக்கமா பரிசுகள்..!

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ப்ரோசோன் மாலில் ரங்கோலி போட்டி நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். இந்த போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி, மதியம் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்குபெறுவோருக்கான விதிமுறைகள்:
➡ கோலம் போட பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் கோலப்பொடி, உப்பு, தானியங்கள் போன்ற மற்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை.
➡ பூக்கோலத்தின் அளவு 5 அடி * 5 அடி இருக்க வேண்டும்.
➡ பங்கேற்பாளர்கள் பூக்கோலத்தை இட தங்கள் சொந்த பொருட்களை கொண்டு வர வேண்டும்.
➡ போட்டி முடிவுகளில் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானவை.
➡ பங்கேற்பாளர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னரே போட்டி நடக்கும் இடத்திற்கு வர வேண்டும்.
➡ கோலம் போட ஸ்டென்சில்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
➡ போட்டியில் பங்கேற்க முன் பதிவு செய்வது அவசியம்.
➡ பதிவுக் கட்டணமாக செலுத்தப்பட்ட பணம் திரும்பத் தரப்படாது.
➡ போட்டி முடிவுகள் 27 ஆகஸ்ட் 2023 அன்று அறிவிக்கப்படும்.

இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பல பரிசுகள் காத்திருக்கின்றன. முதல் பரிசாக மைக்ரோவேவ் ஓவன், இரண்டாம் பரிசாக வெட் கிரைண்டர் மற்றும் மூன்றாம் பரிசாக இண்டக்ஷன் அடுப்பு ஆகியவை வழங்கப்படவுள்ளது. மேலும் ஆறுதல் பரிசாக அவந்தாரா சில்க்ஸ் வழங்கும் பட்டுப் புடவைகளும் வேறு பல பரிசுகளும் காத்திருக்கின்றன. போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் ரூ.200/- மதிப்புள்ள திரைப்பட டிக்கெட் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளோர் ரூபாய் 200 செலுத்தி, https://surveyheart.com/form/64e468bbed07c551d0691d42 என்ற இணைப்பு மூலம் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம். போட்டிக்கான நுழைவுக் கட்டணத்தை 9159672227 என்ற எண்ணிற்கு GPAY மூலமாகவோ lvsubha4387@okicici என்ற யூபிஐ ஐடி மூலமாகவோ செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு +91 9043130178 மற்றும் +91 8778210040 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றிட வாழ்த்துக்கள் மக்களே...!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe