கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

published 1 year ago

கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை:  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளைச் சார்ந்து இருக்கும் நீர் நிலைகளான குளம், குட்டை, ஏரி, பள்ளம், ஆறு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது. ஆகையால் நீர்நிலை சார்ந்த தொழிற்சாலை கழிவுநீர்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கழிவுநீர்களும் சில இடங்களில் கலந்து நீரின் தன்மை கெட்டு நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும் பொதுமக்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புற சாலைகளில் வீட்டுக் கழிவுகள் கொட்டி பொது சாலை விவசாயத்திற்கு இடையூறாக இருந்து வருவதாலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe