தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்

published 1 year ago

தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ல்  கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்

கோவை: தமிழகம் முழுவதும் ஜனவரி 21ம் தேதி பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கோவையில் தெரிவித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியில் தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்பதை முன்நிறுத்தி வாதிட்டு தீர்ப்பை பெற்று இருந்தால் நீர்பங்கீடு எளிதாக இருந்திருக்கும். காவிரியில் 485 கனஅடி தண்ணீர் வந்தால் அதில் 177.25 கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும். நாம் அந்த தண்ணீரை மேட்டூர் அணையில் தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். 

எனவே தினமும் நீர்ப்பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம் பெற்று இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. கள் மதுபானம் அல்ல. உணவுப்பொருள்தான். எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்த உள்ளோம். கள்ளுக்கான தடை நியாயமானதே என நிரூபிப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe