நீங்கள் IIT-ல் படிக்க ஆசைப்படுபவரா? - கோவையில் IIT மெட்ராஸ் திட்ட தலைவர் பேச்சு!

published 1 year ago

நீங்கள் IIT-ல் படிக்க ஆசைப்படுபவரா? - கோவையில் IIT மெட்ராஸ் திட்ட தலைவர் பேச்சு!

கோவை: இந்தியாவின் மிக பெருமைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIT மெட்ராஸ் அடுத்த மாத இறுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்துகிறது.

இந்த நுழைவுத்தேர்வில் சரியான பதில் எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் நவம்பரில் தேர்சிக்கான ஆணையம் வழங்கப்படும் என IIT மெட்ராஸ் திட்ட தலைவர் இன்று கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 17 மாநகராட்சி மேல்நிலைப்பளளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழிகாட்டி நிகழ்ச்சி (Career Guidance) இன்று ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்பின் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்1671 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை IIT மெட்ராஸ் திட்ட தலைவர் (வழிகாட்டி நிகழ்சசி ஒருங்கிணைப்பாளர்) திரு.என்.ஹரிகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். அப்படி படித்தால் நிச்சயம் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அனைத்து கல்வி பிரிவுக்கும் மதிப்பு உண்டு. கல்வி கற்பது மிகவும் எளிதானது. மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும்.

IIT மெட்ராஸ் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்துகிறது. ஆன்லைனில் வீடியோ வடிவில் கேள்விகள் வெளியிடப்படும். IIT மெட்ராஸில் படிப்பதற்காக அக்டோபர் இறுதியில் நுழைவு தேர்வு நடைபெறும்.

இந்த நுழைவுத்தேர்வில் சரியான பதில் எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர், நவம்பரில் தேர்சிக்கான  ஆணையம் வழங்கப்படும்.

IIT மெட்ராஸில் இறுதி ஆண்டு படிக்கும் போது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிகபட்சமாக மாதம் ரூ.1 லட்சம் முதல்  ஆண்டிற்கு 1 கோடி வரையில் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே, மாணவ செல்வங்கள் அரசின் பல்வேறு திட்டங்களையும் ஊக்கதொகைகளையும்  நல்ல முறையில் பயன்படுத்தி கடினமாக உழைத்து பெற்றோர்க்கும், பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்

Source ; COVAI CHRONICLE 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe