'நைட் ரோடு' போட்டா அப்போவும் வருவேன்.. நள்ளிரவில் ஆய்வில் இறங்கிய கோவை 'கமிஷனர்'..!

published 1 year ago

'நைட் ரோடு' போட்டா அப்போவும் வருவேன்.. நள்ளிரவில் ஆய்வில் இறங்கிய கோவை 'கமிஷனர்'..!

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பிரதாப் நள்ளிரவில் சாலை அமைக்கும் பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார்.

கோவை மாநகரில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன. பகல் நேரங்களில் சாலை அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இரவு நேரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று இரவு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண் 83, வ.உ.சி பூங்கா சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு  நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ 12.50 லட்சம் மதிப்பீட்டில் 250   மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அங்கு நள்ளிரவில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் தீடீர் ஆய்வு செய்தார்.

அப்போது தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும்  தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார்.
புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தை சாலையை தோண்டி பார்த்து ஆய்வு செய்தார்.

சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும்  ஒப்பந்ததாரர்கள் தரமற்ற சாலையை போட்டு விடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி ஆணையர் அவ்வப்போது நேரில் கள ஆய்வு செய்து வருகிறார். இதனிடையே நள்ளிரவு நேரத்திலும் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளார் கோவை மாநகராட்சி ஆணையர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe