வெட்டும் மரக்கிளைகளை மின்துறை வாகனம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்... மின் வாரியத்திடம் முறையிட்ட 44வது வார்டு கவுன்சிலர்..!

published 1 year ago

வெட்டும் மரக்கிளைகளை மின்துறை வாகனம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்... மின் வாரியத்திடம் முறையிட்ட 44வது வார்டு கவுன்சிலர்..!

கோவை: கோவை மாநகராட்சி 44 வது வார்டு கவுன்சிலர் காயத்ரி ராஜ் முரளி கோவை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நக்கீரனிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், சாய்பாபா காலனி, பகுதியில் ஏராளமான மரங்கள் இருக்கும் சூழ்நிலையில்,

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மின்சார கம்பியின் மேல், உராயும் மரக்கிளைகளை மின்சார இலக்காவை சார்ந்தவர்கள் வெட்டி அகற்றுகின்றனர். வெட்டிய மரக்கிளைகளை ஆங்காங்கே போட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதிகளில் குப்பைகள் தேங்குகின்றன. நாளடைவில் அந்த பகுதியே குப்பை கிடங்காக மாறும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

இது பொது மக்களுக்கு கொசு தொந்தரவும் வேறு பல இடையூறுகளையும் ஏற்படுத்துகிறது. வார்டில் உள்ள துப்புரவு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட  வாகனத்தில் வார்டில் தேங்கும் குப்பைகளை எடுப்பதற்கே சரியாக உள்ளது. எனவே மின்சார இலாகவினால் ஒதுக்கப்பட்ட வண்டியில் இந்த மர கிளைகளை அப்புறப்படுத்துவதற்கு  ஆவண செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe