கூட்டணியும் கிடையாது புண்ணாக்கும் கிடையாது- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார்…

published 1 year ago

கூட்டணியும் கிடையாது புண்ணாக்கும் கிடையாது- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார்…

கோவை: கூட்டணியும் கிடையாது புண்ணாக்கும் கிடையாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அண்ணாமலையை நீக்கினாலோ, அல்லது அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாலோ மீண்டும் மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அப்போது SP வேலுமணி அக்கேள்வியை தவிர்த்து எழுந்து சென்றார். இதை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜிஅருண்குமார் கூறிச் சென்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe