வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி...

published 1 year ago

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்க உள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  

கோவை மாவட்டத்தில் தமிழ்க்கனவு நிகழ்வின் மூன்றாவது நிகழ்வு வரும் 22.09.2023 அன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாகவும் “எனக்குள் ஒரு தலைவன்” என்னும் பொருண்மையில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளதாகவும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, நான் முதல்வன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe