அதிமுக பாஜக முறிவு விவகாரம்- வானதி சீனிவாசன் கூறிய பதில்...

published 1 year ago

அதிமுக பாஜக முறிவு விவகாரம்- வானதி சீனிவாசன் கூறிய பதில்...

கோவை: அதிமுக பாஜக முறிவு விவகாரத்தில் தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தையும் வெளியிட மாட்டோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் கருத்தையும் வெளியிடுவதாக இல்லை. இது குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள் அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம். அதிமுக வினர் கூறிய கருத்துக்களும் அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe