சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம்…

published 1 year ago

சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம்…

கோவை: சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கு இடையே கடந்த வாரம் கலவரம் ஏற்பட்டது. கைதிகளும் காவலர்களும் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டதில் கைதிகள் மற்றும் காவலர்கள் பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இது குறித்து சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் நேரில் சென்று கைதிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர்கள்,
சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகளிடம் கேட்கச் சென்ற போது காவலர்கள் சுற்றி நின்று கைதிகளை பேசிவிடாமல் தடுத்து வருகின்றனர்.

சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகள் வழக்கறிங்களிடம் கூறியதாக சில காவலர்கள் பெயரை தெரிவித்தார்.சிவக்குமார்,ராகுல்,
சடையன்,ஷாஜகான் மற்றும் சில காவலர்கள் பெயரை கைதிகள் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறினார்.

சிறையில் இருக்கும் கைதிகளை காவலர்கள் மனித உரிமை மீறி தாக்கி உள்ளதாகவும் அந்த 7 கைதிகளில் வயிற்றில் கண்ணாடிகள்,பிளேடுகள் போன்றவற்றை உள்ளே இருப்பதாக வழக்கறிஞர் கூறினார்.

இந்த 7 கைதிகளை தனி சிறையில் அடைத்து வைத்து இரவு நேரங்களில் தூங்குவிடாமல் தண்ணீர் ஊற்றுவதாகவும் சரியான முறையில் உணவு மற்றும் மருத்துவம் பார்க்கவில்லை என காவலர்கள் மீது வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்த இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

காவலர்கள் சிறையில் கைதிகளின் கை,கால்களை உடைத்து சாப்பிட முடியாத அளவிற்கு சித்திரவாதம் செய்து வருவதாக கூறினார். இதனால் கைதிகளுக்கு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம் என்று தெரிவித்தார்.

சிறையில் கைதிகளை சந்தித்து குறைகளை கேட்கச்சென்ற வழக்கறிஞர்களை ஷூவை கலட்ட கோரியும்,சட்டையை கழட்ட கோரியும் சிறைக்காவலர்கள் வழக்கறிஞர்களை கைதி போல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe