உண்மையான மனித இதயத்தை கொண்டு ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்தும் கண்காட்சி..!

published 1 year ago

உண்மையான மனித இதயத்தை கொண்டு ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்தும் கண்காட்சி..!

உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் உண்மையான மனித இதயத்தை கொண்டு கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

ஆரோக்கியமாக இதயத்தை பாதுகாப்பதற்காகவும், இதய நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத்டம் 29ம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இதய அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் மருத்துவ மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு இதயத்தின் செயல்பாடுகள், பல்வேறு இதய நோய்கள் ஏற்படும் போது அதற்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மேலும் உண்மையான மனித இதயம் மற்றும் 5 வயது குழந்தையின் இதயத்தை காட்சிப்படுத்தி இதயத்தின் அமைப்பு மற்றும் இதயத்தின் எந்த பகுதிகளில் எல்லாம் பாதிப்பு ஏற்படும் அளவு அதிகம் உள்ளது, அதற்கு மருத்துவ கருவிகளை பயன்படுத்தி எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இந்த கண்காட்சியானது வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இதய அறிவியல் கண்காட்சி இன்று முதல் துவங்கி அக்டோபர் 1ம் தேதி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe