கோவையில் 1.5 ஆண்டில் ரூ.2.5 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்பு..! 153 போக்சோ வழக்குகள்.. எஸ்.பி பேட்டி…

published 1 year ago

கோவையில் 1.5 ஆண்டில் ரூ.2.5 கோடி மதிப்பிலான செல்போன்கள்  மீட்பு..! 153 போக்சோ வழக்குகள்.. எஸ்.பி பேட்டி…

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் 153 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்பி பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன ரூ. 40 லட்சம் மதிப்பிலான 200 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி  கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போனை ஒப்படைத்தார்.

அப்போது எஸ்பி பத்தி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 34 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 349 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ. 70 லட்சம் மதிப்பிலான 660 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ரூ.33 லட்சம் மதிப்பிலான போதை சாக்லேட் களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் 5 69 திருட்டு வழக்குகளில் 415 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ. 4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 153 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 134 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காணாமல் மற்றும் திருடு போன ரூ. 2.50  கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 687 பள்ளிகளில் படிக்கும், 46,884 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 

கோவை மாவட்டத்தில் இதுவரை நடப்பாண்டில் 7519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe