கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்...

published 1 year ago

கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்...

கோவை: கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம் புறநகர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை தொண்டாமுத்தூர் நரசிபுரம் எட்டிமடை கா.கா சாவடி அன்னூர் தெலுங்குபாளையம் கோவில்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்களும் பொதுவான குறைகள் குறித்து மனுகளும் தனித்தனியாக பெறப்பட்டது. இந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட கலெக்டரின் விவசாய துறை நேரடி உதவியாளர் சபி அகமத், வேளாண்மை துறை இணை இயக்குனர் முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் பார்த்திபன் மற்றும் ஊரக வளர்ச்சி பேரூராட்சி பஞ்சாயத்து அரசு அதிகாரிகள் பங்கு பெற்றனர்.

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் இருந்து விவசாயிகளினால் போதிய அளவு பயிர்களை சாகுபடி பண்ண முடியவில்லை என்றும் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் நீர் வரத்து இல்லாமல் பயிர்கள் காய்ந்துள்ள காரணத்தினால் கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும் விவசாய நிலங்களில் நுழைகின்ற வனவிலங்குகளை முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும், மனித மிருக மோதல்களை தடுக்கும் விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தமிழக அரசின் காப்பீட்டுத் தொகை, நிவாரணத் தொகை போன்றவற்றை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தரவேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசும்போது விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கிசான் கார்டு அட்டைகளை தற்போது அனைத்து கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் வேளாண்மை துறை போன்றவற்றில் புதிய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன அதனால் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பங்களை கொடுத்து கிசான் அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார் மேலும் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இழப்பீடு தொகைக்கு மாதம் தோறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றன இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கிசான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது உடனடியாக அதை இணைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe