கோவையில் மாநில அளவிலான எறிபந்து போட்டி.. அசத்தும் வீரர் வீராங்கனைகள்..!

published 1 year ago

கோவையில் மாநில அளவிலான எறிபந்து போட்டி.. அசத்தும் வீரர் வீராங்கனைகள்..!

கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு மாநில எறிபந்து கழகம், கோவை  மாவட்ட எறிபந்து கழகம் இணைந்து கோவையில் 21வது மாநில அளவிலான சீனியர் எறிபந்து போட்டியை கடந்த 28ம் தேதி முதல் நடத்தி வருகின்றன. தியாகி என்.ஜி.ஆர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் இந்த போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட 38 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் தலைவரும் இந்திய எறிபந்து கழக பொருளாளருமான பால விநாயகம் தலைமையில்  நடைபெறும் இந்த போட்டியில் பெண்கள், ஆண்களுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

மேலும், இப்போட்டிகளில் சிறந்தது விளையாடும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். அக்டோபர் 1ம் தேதி இதன் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்றும், பள்ளி கல்லூரிகளில் விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டை அடுத்தாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று வீரர் வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் தமிழ்நாடு மாநில எறிபந்து கழகத்தின் பொது செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றினார். மற்றும் கோவை மாவட்ட யுனிக்யூ எறிபந்து கழகத்தின் தலைவர் கவியரசன்,
செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் தியாகு, என்ஜி ஆர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe