பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் அதிகாரிகள் தர்ணா போராட்டம்...

published 1 year ago

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் அதிகாரிகள் தர்ணா போராட்டம்...

கோவை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் இன்று மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் அதிகாரிகள் வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நல சங்கங்களை சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் "பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 1995ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் இணைத்திட வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும், ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை மேம்படுத்திட வேண்டும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும்" ஆகிய ஏழு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிகாரிகள் வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe