தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீர்வெப்ப திரவமாக்கல் உலைக்கு வடிவமைப்பு காப்புரிமை!

published 1 year ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீர்வெப்ப திரவமாக்கல் உலைக்கு வடிவமைப்பு காப்புரிமை!

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நீர்வெப்ப திரவமாக்கல் கலன் தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறையின் விஞ்ஞானிகளான முனைவர் ர.திவ்யபாரதி மற்றும் முனைவர் ப.சுப்பிரமணியன் ஆகியோர்களின் மூலம் நீர்வெப்பதிரவமாக்கல் கலனுக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

நீர்வெப்ப திரவமாக்கல் அமைப்பானது, கலக்குவான், வெப்பப்படுத்துவான் மற்றும் குளிர்வி ஆகிய பாகங்களைக் கொண்ட உயர் அழுத்தக் கலனாகும். இக்கலனானது, ஈரத்தன்மை அதிகமுள்ள உயிரிக் கழிவுகளிலிருந்து உயிரி எண்ணெய் உற்பத்தி செய்ய உதவுகிறது. நீர்வெப்ப திரவமாக்கல் முறையில் கரிமற்றும் நீர்திரவம் ஆகியவை உபபொருளாக கிடைக்கின்றன. உயிரி எண்ணெயை நேரடியாக உலைகளில் எரி பொருளாகவும், சுத்திகரித்து வாகனங்களில் எரி பொருளாகவும் பயன்படுத்தலாம். கரியானது, திட உயிரி எரிபொருளாக பயன்படுவதுடன் மண் வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இம்முறையில் பெறப்படும் மற்றொரு உபபொருளான நீர்திரவம் அங்கக இரசாயனங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதிலுள்ள இரசாயனங்களை தொழிற்சாலைகளில் உகந்த முறைகள் மூலம் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe