விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்...

published 1 year ago

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்...

கோவை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில் கோவையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

நடிகர் அஜித் நடிப்பில் எடுக்கப்பட்டு வரும் விடாமுயற்சி திரைப்படம் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பிறகு அண்மையில் அஜர்பைஜனில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா உட்பட முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்களுக்கு தற்போது படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோவையில் நடிகர் அஜித்தின் ரசிகரான ரெட்.கே.பிரித்தன் என்பவரின் RKP அஜித்குமார் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் கோவை மாநகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள்து. அதில் "AJITH SIR.... உங்கள் வருகையும் சரி... எங்கள் கொண்டாட்டமும் சரி... சற்று தள்ளி போகலாம் ஆனால் ஒரு போதும் குறையாது... விடாமுயற்சி வருக வெல்க..." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் ரயில் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இதனை அவ்வழியாக செல்வோர் நின்று பார்த்து செல்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe