மருதமலை கோவில் படிக்கட்டில் நடமாடும் சிறுத்தை: திக்.. திக்.. வீடியோ..!

published 1 year ago

மருதமலை கோவில் படிக்கட்டில் நடமாடும் சிறுத்தை: திக்.. திக்.. வீடியோ..!

கோவை: மருதமலை முருகன் கோவில் படிப்பாதையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7"ம் படை வீடு என அழைக்கப்படுகிறது. மருதமலை முருகன் கோவில்
இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். முக்கிய விழா நாட்கள், விஷேச தினங்களில் இந்த கோவி லுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

வாகனங்களுக்கு தடை
தற்போது மலைக்கோ வில் பகுதியில் லிப்ட் அமைப்பது, தார்சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மலை ப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்பவர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லலாம் என அறி விக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில், உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் நடமாடியுள்ளது. இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில், பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

படிப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்லும் நிலையில் சிறுத்தை நடமாட்டம் பற்றிய தகவல் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/ap3yGrj4Gcg?si=2MO6Zl1euZ8k5Qtj

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe