அமேசான் ஆன்லைனில் புதிய விற்பனையாளர்களுக்கு சலுகை- வர்த்தக துணை தலைவர் தகவல்!

published 1 year ago

அமேசான் ஆன்லைனில் புதிய விற்பனையாளர்களுக்கு சலுகை- வர்த்தக துணை தலைவர் தகவல்!

கோவை: நாடு முழுவதும் 'அமேசான் கிரேட் இந்தியன் வெஸ்டிவல்' சேல் துவங்கி உள்ள நிலையில், அமேசான் இந்தியாவின் உலகளாவிய வர்த்தக துணை தலைவர் விவேக் சோமரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: அமேசானுக்கு தமிழகம் முக்கியமான வர்த்தக சந்தையாக உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆன்லைன் விற்பனையை எளிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களின் விற்பனையாளர்களின் தயாரிப்புகளை அதிகளவில் விற்பனை செய்ய புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறோம். மேலும், 'அமேசான் கிரேட் இந்தியன் வெஸ்டிவல்' கடந்த 8-ம் தேதி துவங்கியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தங்கள் வணிகத்தை வளர்க்க இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். 

சமீபத்திய ஆய்வின்படி, 81 சதவீத நுகர்வோர் இந்த பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது பெருநகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 78 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 68 சதவீத நுகர்வோர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அமேசான் சிறந்த தளமாகவும், பண்டிகை கால ஷாப்பிங்கிற்கு மிகவும் நம்பகமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறது. சென்னை, கோவையில் கூடுதலாக 30 லட்சம் கனஅடியுடன் 5 நிறைவேற்று மையங்களை அமைக்கவும் முதலீடு செய்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி, புதிய விற்பனையாளர்களுக்கு பரிந்துரை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த சலுகை அவர்கள் இணைந்த நாளில் இருந்து 60 நாட்கள் இருக்கும். புதிய விற்பனையாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருட்களை ஆன்லைனில் எளிதாக விற்பனை செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe