மகாளய ஆமாவாசை : பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

published 1 year ago

மகாளய ஆமாவாசை : பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

இந்துக்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசையாக கருதப்படுகிறது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வர்.

ஆனால் மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் அனைத்து முன்னோர்களையும் நினைவு கூர்ந்து, புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகின்ற நிலையில் இந்த மகாளய பட்ச அமாவாசை தினத்தில்,

தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனிப்பெரும் சிறப்பாக திகழ்கிறது.

இதனிடையே கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுக்கும் பொருட்கள் ஆற்றங்கரையில் விடப்பட்ட நிலையில் பேரூராட்சி  நிர்வாகம் சார்பில் அவ்வப்போது அவை அகற்றப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe