கோவை ரயில் நிலையம் உலகத்தரம் வாந்த ரயில் நிலையமாக மாறப்போகிறது..!

published 1 year ago

கோவை ரயில் நிலையம் உலகத்தரம் வாந்த ரயில் நிலையமாக மாறப்போகிறது..!

கோவை: தனியார் மற்றும் பொது கூட்டு பங்களிப்புடன் கோவை ரயில்நிலையம் ரூ. 500 கோடி மதிப்பில் உலக தரம் வாய்ந்த ரயில்நிலையமாக மேம்படுத்தப்படும் என கோவை போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தின் போத்தனூர் ரயில் நிலையம் மேபடுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய ஆர்.என்.சிங் கோவை வந்தார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான மெமு ரயில் சேவைகளை போத்தனூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பரிசீலிக்கப்படும்.

ரூ.12 கோடி மதிப்பில் போத்தனூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றது. வாகனம் நிறுத்தும் இடம், சுற்றும் பகுதி, நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள், கோச் இன்டிகேஷன் போர்டுகள் போன்றவை மேம்படுத்தப்படும்.

எட்டிமடை - வளையாறு இடையே உள்ள ரயில்பாதையை காட்டு யானைகள் எளிதில் கடக்க மூன்றாவது சுரங்க பாதை கட்ட உள்ள சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இரண்டாம் பாலம் கட்டும் பணிகள் நவம்பரில் துவங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe