மரங்களை வெட்டி பூங்காக்களை அழித்து தண்ணீர் தொட்டி கட்டுவதா? கோவையில் சிவராம் நகர் பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு.

published 2 years ago

மரங்களை வெட்டி பூங்காக்களை அழித்து தண்ணீர் தொட்டி கட்டுவதா?  கோவையில் சிவராம் நகர் பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு.

கோவையில் சூயஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து  நீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது இதனால் சிவராம் நகர் குடியிருப்பு சங்கத்தினர் கண்டனங்களையும்  எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் கூறியதாவது இந்த பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பல குடும்பங்கள் இணைந்து ஒரு குடியிருப்பு நல சங்கமாக செயல்பட்டு வருகிறோம். இப்பகுதியில் உள்ள reserved site இடத்தில் பூங்கா  அமைந்துள்ளது. 

இப்பூங்காவில் குழந்தைகள் பொழுதுபோக்கு   முதியோர்கள்  நடபயணம்  என  அக் குடியிருப்பு  பகுதியினருக்கு பெரும் பயனாக இருக்கிறது. மேலும் மரங்களை நட்டு பராமரித்துக் கொண்டு வருகிறோம். தற்போது இப்பூங்கா வை அகற்றியும் மரங்களை அழித்தும் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு மாநகராட்சி ஆணையரிடம் , மனு அளித்துள்ளோம்.  

தற்போது ஆட்சி மாற்றத்தால் மீண்டும் இத் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவது இக்குடியிருப்ப வாசிகளிடம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி தண்ணீர் தொட்டி கட்டும் பணியை கை விடவும் மீண்டும் அந்த இடத்தில் பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe