கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு...

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு...

கோவை: கோவையில்  நாளை  (நவம்பர் 3ஆம் தேதி)
மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  நாளை (நவம்பர் 3 ஆம் தேதி)
மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை
காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும்.

அரசூர் துணை மின் நிலையம்

அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதுார், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னுார் ரோடு, பொன்னாண்டம்பாளையம் மற்றும் மோளபாளையம்.

கள்ளிமடை துணை மின் நிலையம்

காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோனாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ேஹாப் காலேஜ் - சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடு.

கதிர்நாயக்கன்பாளையம் துணைமின்நிலையம்

ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பேநகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீ நாரம் நகர், கதிர்நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe