கோவையில் திமுக நிர்வாகிகள் வீட்டில் 4வது நாளாக சோதனை…

published 1 year ago

கோவையில் திமுக நிர்வாகிகள் வீட்டில் 4வது நாளாக சோதனை…

கோவை: கோவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சவுரிபாளையம் காசா கிரான்ட் அலுவலகம், கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு ஆகிய 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், முதலீட்டிற்கான தொகை, வருமான ஆதாரம், வருமான வரி முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? போன்ற விவரங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe