தீபாவளியை முன்னிட்டு கோவையில் பேருந்து நிலையங்கள் மாற்றம்...

published 1 year ago

தீபாவளியை முன்னிட்டு கோவையில் பேருந்து நிலையங்கள் மாற்றம்...

கோவை: வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவர். இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் திருப்பூர் ஈரோடு ஆனைகட்டி மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி கூடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக கோவை மதுரைக்கு 100 பேருந்துகள், கோவை திருச்சிக்கு 80 பேருந்துகள், கோவை தேனிக்கு 50 பேருந்துகள், கோவை சேலத்திற்கு 60 பேருந்துகள் என சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இவை வரும் 9ம் தேதி முதல் 11ம்தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe