பள்ளி மாணவனின் ஷூவிற்குள் இருந்த நாகப்பாம்பு- பதைபதைக்கு காட்சிகள்...

published 1 year ago

பள்ளி மாணவனின் ஷூவிற்குள் இருந்த நாகப்பாம்பு- பதைபதைக்கு காட்சிகள்...

கோவை: கோவையில் பள்ளி மாணவனின் காலணிக்குள் இருந்த நாக பாம்பு பிடிக்கப்பட்டது.

வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கு மாணவர் அவனது வீட்டில் உள்ள காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற பொழுது காலணியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

பின்னர் காலணியை நகர்த்தி பார்த்ததில் காலணிக்கு உள்ளே பாம்பு ஒன்று இருந்துள்ளது.அதனை
பார்த்தவுடன் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் கொடுத்து அங்கு சென்ற
வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாபகரமாக பிடித்திருக்கின்றார். பிடிப்பட்டபாம்பு நாகபாம்பு என தெரியவந்தது.

பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

மழைக்காலத்தில் பாம்புகள் வெளியில் உலா வரும் பொழுது கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம் எனவும் அதன் காரணமாக காலணிக்குள் 
புகுந்திருக்கும் என பாம்பு பிடி கூறியுள்ளார். பொதுமக்கள் இது போன்ற மழை காலங்களில் கவனமாக இருப்பது அவசியம் மோகன் தெரிவித்துள்ளார்.

தற்போது பாம்பை பிடிக்கும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பில் ஆழ்த்தி உள்ளது.

பாம்பு பிடிக்கும் வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/22Qr3_-oH2A

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe