மாவோயிஸ்ட்கள் ஊடுருவாமல் தடுக்க கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு தீவிரம்...

published 1 year ago

மாவோயிஸ்ட்கள் ஊடுருவாமல் தடுக்க கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு தீவிரம்...

கோவை: மாவோயிஸ்ட்கள் ஊடுருவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி 160 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
கடந்த 14ம் தேதி கேரளா வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட்கள் மற்றும் மாவோயிஸ்ட் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்  2  மாவோயிஸ்டுகள் குண்டு காயத்துடன் தப்பித்து சென்று விட்டனர். அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், மற்ற மாவோயிஸ்ட்கள் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து கோவைக்குள் ஊடுறுவாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகம் கேரளா எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, வேலந்தாவளம், க.க.சாவடி, காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

புதியதாக 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 160 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் இரவு பகலாக மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி்.சி.ஐ.டி, நுண்ணறிவு பிரிவு, க்யூ பிரான்ச், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மாவோயிஸ்ட்கள் ஊடுருவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
துப்பாக்கி ஏந்தியபடி 160 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
கடந்த 14ம் தேதி கேரளா வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட்கள் மற்றும் மாவோயிஸ்ட் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்  2  மாவோயிஸ்டுகள் குண்டு காயத்துடன் தப்பித்து சென்று விட்டனர். அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், மற்ற மாவோயிஸ்ட்கள் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து கோவைக்குள் ஊடுறுவாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகம் கேரளா எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, வேலந்தாவளம், க.க.சாவடி, காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

புதியதாக 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 160 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் இரவு பகலாக மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி்.சி.ஐ.டி, நுண்ணறிவு பிரிவு, க்யூ பிரான்ச், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe