காண்போரை பிரமிக்க வைத்த கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி - வீடியோ உள்ளே...

published 1 year ago

காண்போரை பிரமிக்க வைத்த கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி - வீடியோ உள்ளே...

கோவை: ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் கல்லூரி மாணவிகள் இணைந்து நடத்திய கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது.

ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தனர். தொடர்ந்து ஶ்ரீ நாட்டிய நிகேதன் குழுவினரின் கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 28 நாட்டிய கலைஞர்கள் ஒன்றாக இணைந்து நடன வடிவில் கர்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை நடித்து காண்பித்து காண்போரை பிரமிக்க வைத்தனர்.

இதுகுறித்து ஶ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளியின் நிறுவனர் மிருதுளா ராய் கூறுகையில்,

இதுவரை 1000 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்களை ஶ்ரீ நாட்டிய நிகேதின் உருவாக்கியுள்ளது. இந்த நடன பள்ளியின் மூலம் நடனக் கலைஞர்களுக்கு தேசிய அளவில் மட்டுமல்லாது உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் பங்கேற்று நமது தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

எங்கள் பள்ளி சார்பில் ஆண்டுதோறும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு எங்கள் பள்ளியின் 21ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கொடை வள்ளல் கர்ணனின் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்தியுள்ளோம். 28பேர் இணைந்து இதனை அரங்கேற்றியுள்ளோம். கடந்த 1 மாதத்திற்கு மேலாக இதற்கான பயிற்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்ட மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் இதில் இடம் பெற்றது. கலாச்சாரத்தையும் கலையையும் பிரதிபலிக்கும் விதமாக நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக மக்களின் பாராட்டுக்களை பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்திக்கான வீடியோவை பார்க்க லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=L6e6xJzBFow

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe