நகை மோசடி குறித்து 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு...

published 1 year ago

நகை மோசடி குறித்து 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு...

கோவை: கோவையில் வீட்டு உரிமையாளரிடம் 10 பவுன் நகை மற்றும் ரூ. 4.80 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை கணபதி கோபால்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் மனைவி கவிதா(48). இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாருலதா(26), முத்துலட்சுமி(27) ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இருவரும் கோவையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்தனர். கவிதாவுடன் நெருங்கி பழகினர். அப்போது கடந்த ஆண்டு சாருலதா மற்றும் முத்துலட்சுமி ரூ. 3.11 லட்சத்தை கவிதாவிடம் கடனாக வாங்கினர். பின்னர் வட்டி தருவதாக 10 பவுன் நகையை பெற்றுள்ளனர். மேலும் சிறிது நாட்கள் கழித்து பல்வேறு காரணங்களை கூறி ரூ. 1.75 லட்சம் பெற்றனர். 

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் வாங்கிய பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்க வில்லை. இது குறித்து கவிதா அவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தில் நிலம் உள்ளது. அதனை உங்களுக்கு தருகிறோம் என தெரிவித்துள்ளனர். அந்த நிலம் குறித்து கவிதா விசாரித்த போது, அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது எனவும், அதனை தனக்கு விற்பதாக இருவரும் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து கவிதா தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி கேட்டபோது கொடுக்க மறுத்து இருவரும் கவிதாவை மிரட்டி உள்ளனர். இது குறித்து கவிதா சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சாருலதா மற்றும் முத்துலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe