கோவையில் பாகுபலி குழுவினர் அமைத்த குதிரை பந்தய சிலை..!

published 1 year ago

கோவையில் பாகுபலி குழுவினர் அமைத்த குதிரை பந்தய சிலை..!

கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் கோவையில் உள்ள ஆடம்பரமான இடங்களில் ஒன்றாகும். சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் ரேஸ்கோர்ஸ் சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றாண்டு பழமையான கிளப்புகள், சாரதாம்பாள் கோவில், பள்ளிகள், மருத்துவமனைகள், வணி நிறுவனங்கள், ஆட்சியர் தொடங்கி அனைத்து அரசு அதிகாரிகள் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு ரேஸ்கோர்ஸ் நடைபாதையை தினமும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் காலையிலும், மாலையிலும் மக்கள் இங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இத்தகைய ரேஸ்கோர்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குதிரைப் பந்தயம்  நடைபெறும் ஒரு இடமாக இருந்துள்ளது.

கடந்த 1815ம் ஆண்டு அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர் தான் ரேஸ்கோர்ஸ் சாலையை மேம்படுத்தி குதிரை பந்தய மைதானத்தை அமைத்தவர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்று ரேஸ்கோர்ஸ் பல பரிணாமங்களை கண்டிருந்தாலும், அதன் வரலாறு இது தான். இதனை மக்களுக்கு எடுத்துக்கூறி வரலாற்றை பறைசாற்றும் விதமாகத்தான் தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் குதிரை பந்தய சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுங்கம் பகுதியில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ரேக்ளா பந்தய சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

குப்புசாமி நாயுடு மருத்துவமனை நிர்வாகம் இந்த சிலைகளை அமைக்க நிதி உதவி அளித்துள்ளது. அதன்படி, ஃபைபர், அலுமினியம் மற்றும் இரும்பு கொண்டு இரண்டு சிலைகளும் தயாரிக்கப்பட்டன. இந்த சிலைகளை சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஃப்ளேக்‌ஷிப் மீடியா நிறுவனம் வடிவமைத்தது. மேலும், பாகுபலி திரைப்பட குழுவை சேர்ந்த ஓவியர்கள் இந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டி தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர்.

கோவையின் வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். அடுத்தமுறை ரேஸ்கோர்ஸ் செல்லும் போது இந்த சிலைகள் முன்பு ஒரு செல்பி எடுக்க மறந்துடாதீங்க..!

ரேஸ்கோர்ஸ்

Race course, Race course Coimbatore, Coimbatore news, news 18 Coimbatore, நியூஸ் 18 கோவை, ரேஸ்கோர்ஸ், கோவை, ரேஸ்கோர்ஸ் வரலாறு, history of race course

Horse racing statue erected by Baahubali team in Coimbatore..!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe