ஜோ படத்தில் வரும் முதல் பாதி காதல் கதை அனைவருக்கும் வரும்- ஜோ பட கதாநாயகர் ரியோ ராஜ் பேட்டி...

published 1 year ago

ஜோ படத்தில் வரும் முதல் பாதி காதல் கதை அனைவருக்கும் வரும்- ஜோ பட கதாநாயகர் ரியோ ராஜ் பேட்டி...

கோவை: புருக்பாண்ட் சாலையில் உள்ள புரூக் பீல்டு மால் PVRல் திரையிடப்பட்டுள்ள ஜோ திரைப்படத்தின் பட குழுவினர்கள் நேற்று மாலை ரசிகர்களுடன் உரையாடினார்கள்.

பின்னர் செய்தியாளர்  சந்திப்பில் பேசிய அப்படத்தின் கதா நாயகர் ரியோராஜ், சென்ற வாரம் இந்த படம் வெளியாகி பல்வேறு பகுதிகளில் திரை அரங்கில் ஹவுஸ்புல் ஆக ஓடுகிறது என்று பலர் கூறியதாகவும் அந்த ஹவுஸ் புல்லை நேராக பார்க்க வேண்டும் என வந்திருப்பதாக தெரிவித்தார். ஈரோடு திருப்பூர் திரை அரங்கு காட்சியை, பார்த்து விட்டு  கோவை வந்துள்ளதாக தெரிவித்த ரசிகர்கள் எங்களிடம் மகிழ்ச்சியாக பேசுவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். இது ஒரு காதல் கதை என குறிபிட்ட அவர், காதலைத் தாண்டி பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் என்னுடைய ஊர் ஈரோடு, கேரளா தமிழ்நாடு பார்டர் என தெரிவித்த அவர் அதனால் தான் இங்கு நாங்கள் ஷூட் செய்தோம் என கூறினார். அடுத்த படம்  பற்றி நான் யோசனை செய்யவில்லை எனவும் இந்த படம் நல்ல ஃபீல் கொடுத்தது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இந்த படத்தை பார்த்து ரசிகர்கள்  அழுது விட்டார்கள் இந்த படத்தில்  முதல் பாதி  காதல் என்பது அனைவருக்கும் வரும் என்றார். இந்த படத்தில் அனைவரும் சேர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

டிடிஎஃப் வாசன் ப்ரமோஷனுக்காக  எடுத்தது என கூறிய அவர் நல்ல கதை வந்தால் அவருடன் நடிப்பேன் எனவும்  அவருக்கு உடல்நிலை சரியில்லை அது முடிந்த பிறகு கண்டிப்பாக நடிப்பேன் எனவும் தெரிவித்தார்.

இந்த படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது எனவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe