பஞ்சாயத்து அலுவலகங்களில் கிளர்க், ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை...!

published 1 year ago

பஞ்சாயத்து அலுவலகங்களில் கிளர்க், ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை...!

 

கோவை: அரசு துறைகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்ட கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் ஏராளமான பணியிடங்களை தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணிகள் மற்றும்  நிரப்பபடவுள்ள மொத்த இடங்கள்:

அலுவலக உதவியாளர் (Office Assistant) – 32 பணியிடங்கள்

ஜீப் டிரைவர் – 01 பணியிடங்கள்

ரெக்கார்ட் கிளர்க் – 01 பணியிடங்கள்

இரவு காவலாளி – 06 பணியிடங்கள்

அலுவலக உதவியாளர் ( Office Assistant) 

விண்ணப்பிக்கும் நபர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிறுக்க வேண்டும் அல்லது பள்ளி படிப்பில் 8 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ.15,700 – ரூ 50,000 வரை

வயது : விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 

பொது பிரிவினருக்கு – 32 வயது 

BC, MBC பிரிவினருக்கு 34 வயது 

SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஜீப் டிரைவர் (Jeep driver)

  1. ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதோடு அந்த தொழிலில் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.19,500 – ரூ62,000 வரை 

வயது: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பொது பிரிவினருக்கு – 32 வயது 

BC, MBC பிரிவினருக்கு 34 வயது

SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ரெக்கார்ட் கிளர்க் (Record Clerk)

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.15,900 – ரூ50,400 வரை 

வயது: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பொது பிரிவினருக்கு – 32 வயது 

BC, MBC பிரிவினருக்கு 34 வயது

SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இரவு காவலாளி (Night Watchman) 

தமிழில் எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியம்.

சம்பளம்: ரூ.15,700 – ரூ50,000 வரை

வயது: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 

பொது பிரிவினருக்கு – 32 வயது 

BC, MBC பிரிவினருக்கு 34 வயது

SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிபதற்கான வழிமுறைகள்:

  • முதலில் https://erode.nic.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

 

விண்ணப்பம் துவங்கும் நாள் : 05.12.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.12.2023

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe