முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கியது போல் பலரும் உதவ முன் வரவேண்டும்- நடிகர் ஹரிஷ் கல்யாண் பேட்டி...

published 1 year ago

முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கியது போல் பலரும் உதவ முன் வரவேண்டும்- நடிகர் ஹரிஷ் கல்யாண் பேட்டி...

கோவை: புதுமுக இயக்குனர் ராம்குமார் மற்றும் பாலகிருஷ்ணா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வெளி யாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் திரையிட்ப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று மாலை கோவை கேஜி திரையரங்கில் பார்க்கிங் பட விளம்பர நிகழ்ச்சிக்காக படத்தின் இயக்குனர் ராம்குமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் திரையரங்கிற்கு வருகை தந்தார் பார்க்கிங் படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடையே கலந்துரையாடினார். தொடர்ந்து அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்,

சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பை விட அதிக நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளி வந்தாலும் கூட புது இயக்குனர் புதுமுக நடிகர்களாக குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும் கூட நல்ல கதை உள்ள படங்களை மக்கள் வரவேற்கிறார்கள். இந்த ஆண்டில் வெளியான படங்களில் பார்க்கிங் படம் மிகச் சிறந்த படத்தின் பட்டியலில் இடம்பெறும் என விமர்சனங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை முதலமைச்சர் நிவாரண நிதியில் வழங்கியிருப்பதாகவும் இதே போல் பலரும் முன் வந்து உதவ வேண்டும் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe