ஓயாமல் உணவளித்த சாந்தி கியர்ஸ் சுப்ரமணியத்தின் நினைவு தினம் இன்று

published 1 year ago

ஓயாமல் உணவளித்த சாந்தி கியர்ஸ் சுப்ரமணியத்தின் நினைவு தினம் இன்று

கோவை: மனிதநேயத்துடன் செய்யும் சேவை, கடவுகளுக்கே செய்யும் சேவை’ இதுதான் கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் தாரக மந்திரம். ரூ.5-ல் இருந்து, ரூ.15-க்கு டிபன் வகைகள், ரூ.25-க்கு தரமான முழுச் சாப்பாடு, டீ, ஃபில்டர் காபி, ராகி பால், சத்து மாவு பால் எல்லாமே ரூ.5 தான்.

கோவையிலுள்ள உயர்தர உணவகங்களின் சுவைக்கும் தரத்துக்கும் சவால்விடும் அளவுக்கு சந்தோஷமான சேவையை இந்த அமைப்பு செய்துவருகிறது.

கோவையில் `சாந்தி கியர்ஸ்’ என்ற நிறுவனத்தை சுப்பிரமணியம் கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கினார். அதன் மூலம், இயந்திர உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்குக் கொடுத்து வேகமாக வளர்ச்சியடைந்தார். 
இதையடுத்து, 1996-ம் ஆண்டு `சாந்தி சமூக சேவை’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் அறங்காவலராகவும் இருந்துவந்தார்.

சாந்தி கியர்ஸ் நிறுவனம், வேறு நிறுவனத்துக்கு விற்கபட்டுவிட்டது. ஆனால், சாந்தி சமூக சேவையின் மூலம் தொடர்ந்து ஏராளமான சேவைகளைச் செய்துவந்தார் சுப்பிரமணியம். உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்திவந்தார். இந்தநிலையில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சாந்தி சமூக சேவை நிறுவனத்தின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

எளிய மக்களுக்கு எதிர்பாராது உணவு வழங்கிய நல் உள்ளத்தை அவரது நினைவு நாளில்  நினைவுகூர்வோம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe