சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராக கோவை சேர்ந்த தொழிலதிபர் தேர்வு...

published 1 year ago

சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராக கோவை சேர்ந்த தொழிலதிபர் தேர்வு...

கோவை: சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஐடிஎம்எப் என்பது 1904ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இது பழமையான அரசு சாரா வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஒட்டு மொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியின் 90 சதவீத உற்பத்தியை உள்ளடக்கிய கூட்டமைப்பாகும். சுருக்கமாக சொன்னால் பல வகையான பஞ்சு மற்றும் ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் துறையின் உலகளவிக அமைப்பாக இது விளங்குகிறது.

இந்த கூட்டமைப்பின் தலைவராக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க முன்னாள் தலைவரும் பஞ்சாலை தொழிலதிபருமான கே.வி. சீனிவாசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது தலைவர் என்பதும் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டுள்ள முதல் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், தென்னிந்திய ஜவுளி உற்பத்தி ஆராய்ச்சி கழகம், பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இன்னிலையில் கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தென் இந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் பொதுச் செயலாளர் செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து கே.வி.சீனிவாசன் கூறும்போது ஐடிஎம்எப் சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் புள்ளிவிவரங்கள், சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் ஏற்றுமதி புள்ளி விவரங்கள், சர்வதேச உற்பத்தி செலவு ஒப்பீடு, பருத்தி மாசு அறிக்கை, உலக ஜவுளி தொழில் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்டு சேவைகள் வழங்கப்படுகிறது.

இதன் உறுப்பினர்கள் சிறப்பு காணொளி கலந்துரையாடலில் பங்கேற்கவும் தொழில்துறை தலைவர்களுடன் சிறப்பு நேர்காணல் மூலம் விவாதம் செய்யவும் வாய்ப்பு அளிக்கிறது.

ஜவுளி தொழில் அமைப்புக்கும் அரசுகளுக்கும் இடையே இந்த அமைப்பு பாலமாக விளங்குவதுடன் ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு உதவும் அமைப்பாக இருக்கிறது என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe